ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் விபத்தில் உயிரிழந்த இரு குடும்பத்துக்கு தலா ரூபாய் 4 லட்சம் மற்றும் ஒரு லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது
நல்லூரில் கனமழையால் வீடு ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மௌனிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் பனையம் பள்ளியைச் சேர்ந்த மாதன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த இருவரின் குடும்பத்திற்கும் தமிழ்நாடு அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மௌனிகாவின் தாயார் சத்யாவிடம் ரூபாய் 4 லட்சமும், ராமனின் மனைவி சுமதியிடம் ரூபாய் ஒரு லட்சத்திற்கான இழப்பீட்டு தொகையை பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஈஸ்வரன் வழங்கினார்.