ஈரோடு: திண்டுக்கல் மாவட்டம் மேல்பள்ளம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அதே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கருத்திபாளையத்தைச் சேர்ந்த சுகந்தி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் காதலித்த இருவரும், கடந்த ஜூலை மாதம் பழனியில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையி, ஹரிஹரன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காரணமாக காட்டி, இவர்களின் திருமணத்தை சுகந்தியின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால், இருவரும் ஓசூரில் தனியாக வாடகை வீட்டில் இருந்தபடியே, ஒரு மருத்துவமனையில் பணியில் செய்து வசித்துள்ளனர். இந்நிலையில், இருவரையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய சுகந்தியின் உறவினர்கள், கடந்த மாதம் 18ஆம் தேதி சுகந்தியை மட்டும் அவர்களது ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.
அதன் பின்னர் சுகந்தியை, ஹரிஹரன் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரை மறந்துவிடும்படி சுகந்தியின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி, தன்னை வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், ஆணவகொலை செய்ய திட்டமிடுவதாகவும் காப்பாற்றுமாறும் மருத்துவர் சுகந்தி, தனது கணவர் ஹரிஹரனுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனால், பதறிபோன ஹரிஹரன் தனது காதல் மனைவியை காப்பாற்றுமாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளார். 5 மாதம் கர்ப்பமாக உள்ள மனைவிக்கு அவரது உறவினர்களால் ஆபத்து இருப்பதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு; மருத்துவமனையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவர்..