ETV Bharat / state

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க புதிய செயலி அறிமுகம்! - app for migrant workers

வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதற்கான இந்தியா மைக்ரேசன் என்னும் செயலியை ரீடு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

reed company launged new app for migrant workers
புலம்பெயர்ந்து தொழிலாளர்களுக்கான புதிய செயலி அறிமுகம்
author img

By

Published : Nov 10, 2020, 4:19 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் பெரும்பாலான தொழிற்சாலைகள், கட்டுமான பணியில் பிகார், ஒடிஸா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குறித்து முறையான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பது கரோனா ஊரடங்கின்போது தெரியவந்தது.

இதனால், அவர்களுக்கு சொந்த ஊர் திரும்ப அரசு போதுமான உதவிகளை செய்யமுடியாமல் சிரமப்பட்டு வந்தது. இந்தச் சிக்கலை இனிவரும் காலங்களில் தவிர்ப்பதற்காக ரீடு எனும் நிறுவனம் இந்தியா மைக்ரேசன் என்ற செயலி (india migration) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் ஆங்கிலம், இந்தி, ஒரியா, தமிழ் ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன.

ரீடு நிறுவனத்தின் இயக்குநர் கருப்பசாமி

இந்தச்செயலி மூலம் தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரம் பதிவு செய்யப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த தகவல்களை தமிழ்நாடு அரசுக்கு ரீடு நிறுவனம் அளிக்கவுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களின் முழு விவரங்கள் பதிவு செய்யப்படுவதால், அரசு அவர்களுக்கு வழங்கும் வசதிகள் முறையாக கிடைக்கப்பெறும் ரீடு நிறுவனத்தின் அமைப்பின் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்தார்.

இந்தச்செயலி மூலம் வெளிமாநில தொழிலாளர் குறித்த விவரங்களை பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்பு சத்தியமங்கலத்தில் இன்று (நவம்பர் 11) நடைபெற்றது. களப்பணியாளர்களுக்கு செயலியின் பயன்பாடு, அதன் செயலாக்கம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.