ETV Bharat / state

செந்நிறத்தில் ஓடும் பவானி: குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்! - பவானி ஆற்றில் செந்நிறமாக ஓடும் மழை நீர்

ஈரோடு: பவானி ஆற்றில் செந்நிற மழைநீர் ஓடுவதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

bhavaini river
author img

By

Published : Aug 13, 2019, 12:28 PM IST

Updated : Aug 13, 2019, 1:39 PM IST

பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேருராட்சிகள், கிராம ஊராட்சிகள் என ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது.

தற்போது பவானி ஆற்றில் செந்நிற மழைநீர் ஓடுகிறது. இந்தத் தண்ணீர் பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் நகராட்சி நீரேற்று நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவருகிறது.

செந்நிறத்தில் ஓடும் பவானி ஆறு

இந்நிலையில் மண் கலந்து குடிநீர் செந்நிறத்தில் வருவதால் நீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காய்ச்சல் உள்ளிட்ட எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:tn_erd_01_sathy_contaminated_water_vis_tn10009

Body:tn_erd_01_sathy_contaminated_water_vis_tn10009

பவானி ஆற்றில் செந்நிற மழை நீர். குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தல்

பவானி ஆற்றில் செந்நிற மழை நீர் ஓடுவதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரை பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் என ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புபகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து தற்போது 92 அடியை எட்டியுள்ளது. மழை காரணமாக தற்போது பவானி ஆற்றில் தண்ணீர் செந்நிறமாக ஓடுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் நகராட்சி நீரேட்டு நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் மண் கலந்து செந்நிறத்தில் வருவதால் நீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் முலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது Conclusion:
Last Updated : Aug 13, 2019, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.