ETV Bharat / state

ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து கொலை: அரசு மதுபான கடையில் பரபரப்பு! நடந்தது என்ன? - Erode Crime

Tasmac shop murder: ஈரோடு, ஒடக்காடு பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையை ஒட்டியுள்ள பாரில் ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மதுபான கடையில் பரபரப்பு
ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 6:31 PM IST

ஈரோடு: ஒடக்காடு பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையை ஒட்டியுள்ள பாரில் ஏற்கெனவே ஒரு கொலை நடந்துள்ள நிலையில் மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதால், சம்பந்தப்பட்ட மதுபான கடை மற்றும் பாரை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டையை சேர்ந்தவர் ரங்கராஜ் என்கிற ரங்கராஜ்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று காலை சுமார் 10.30 மணியளவில் மது அருந்துவதற்காக ஒடக்காடு பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையை ஒட்டியுள்ள பாருக்கு ரங்கராஜ் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவருக்கும், ரங்கராஜ்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கோபத்துடன் அங்கிருந்து வெளியே புறப்பட்டுச் சென்ற நபர் மீண்டும் மதுபான பாருக்கு வந்து ரங்கராஜை கட்டையால் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த ரங்கராஜ்குமார் நிலை குலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைக் கண்ட மர்ம நபர் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, சம்பவம் குறித்துப் பார் உரிமையாளர்கள் சித்தோடு காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சூட்கேசில் சிறுவன் சடலம்; தாய் கைது.. 36 மணி நேரத்திற்கு முன் கொல்லப்பட்டதாக தகவல்!

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இந்த பாரில் ஏற்கெனவே ஒரு கொலை நடந்துள்ளதால், சம்பந்தப்பட்ட மதுபான கடை மற்றும் பாரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இறந்து போன ரியல் எஸ்டேட் அதிபர் ரங்கராஜ் மீது, ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை குற்றச்செய்திகள்: முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.