தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்ததால் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு ஏழு நாட்கள் தளர்வற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொதுவிநியோக பொருட்களைத் தொடர்ந்து பெறும் வகையிலும், கரோனா முதற்கட்ட நிவாரணத் தொகையான ரூ.2 ஆயிரத்தை இதுவரை பெறாதவர்கள், அதனைப் பெறும் வகையிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழலிலும், அனைத்து நியாயவிலைக் கடைகளும் இன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறக்கப்பட்டன.
பொது மக்கள் உரியப் பாதுகாப்பு முறையில் இதனைப் பயன்படுத்தி, முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு!