ETV Bharat / state

அரியவகை வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஈரோடு மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்று வரும் வனவிலங்கு கணக்கெடுப்பில் அரியவகை வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
author img

By

Published : Dec 21, 2021, 1:15 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, கழுதைப்புலி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசிக்கின்றன.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு பணி குறித்த விவரங்கள் கண்டறியப்படுகிறது. அதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக் காலத்திற்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா வனப்பகுதியில் அரிய வகை மான் இனமான பிளாக்பக் என்று அழைக்கப்படும் வெளிமான்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கருவண்ணராயர் கோயில் வனப்பகுதி, மாயாறு பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெளிமான்களின் நடமாட்டத்தை கண்ட வனத்துறை ஊழியர்கள், அதன் நடமாட்டத்தை வனவிலங்குகள் கணக்கெடுப்பில் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: இரண்டு குட்டிகளை ஈன்ற ‘பாராசிங்கா’ மான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.