ஈரோடு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல்காந்தி பிறந்தநாள் விழா இன்று (ஜூன்.19) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ஈரோடு இடையன்காட்டு வலசில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா கலந்து கொண்டு 200 பேருக்கு 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பை எம்.எல்.ஏ., திருமகன் ஈவேரா வழங்கினார்.
இதேபோல் ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு, அரசு மருத்துவமனை ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி் நடைபெற்றது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி பிறந்தநாள் - கே.எஸ் அழகிரி ட்விட்!