ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது தோட்டத்தில் பசுக்கள் வைத்துப் பராமரித்துவருகிறார். மேலும், இவர் நாய்க்குட்டி ஒன்றையும் வளர்த்துவருகிறார்.
இந்த நாய்க்குட்டி வீட்டில் அனைவரிடமும் செல்லமாக விளையாடிவருகிறது. இந்நிலையில் பசுக்கன்று கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே சுற்றித் திரிந்தது.
இதைக் கண்ட விவசாயி செல்லமாக விளையாடும் நாய்க்குட்டியிடம் பசுக்கன்றின் கயிற்றைப் பிடித்து வா எனக் கூறுகிறார்.
இதனை அடுத்து நாய்க்குட்டியும் விசுவாசமாகச் சென்று பசுக்கன்றின் கயிற்றைத் தனது வாயால் கவ்விப் பிடித்து இழுத்தபடி கன்றை வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி செல்லமாக விளையாடியது.
இதையும் படிங்க: நாயிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி: வைரல் வீடியோ