ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில், அங்கு பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், வருவாய்த்துறையினர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டனர். ஆனால், அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கிவந்ததால் பொதுமக்கள் ஈரோடு - முத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர். மேலும், அவ்வழியாக வந்த வடமாநில இளைஞர்களை வழிமறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள மிசோரம்