ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் பைப்லைன் மூலம் குடிநீர் வழங்கி வந்தது.
அப்பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 15 தினங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. இதனால் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் கிராமத்திற்கு வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கொத்தமங்கலம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிகிறது.
இதனால் இன்று (ஜன.20) குமரன் நகர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சத்தியமங்கலம் - கொத்தமங்கலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய குடிநீரேற்று கிணறுகள் - மாற்று வழியில் குடிநீர் விநியோகம்!