ETV Bharat / state

கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போரட்டம் - கூட்டு குடிநீர் திட்டம்

ஈரோடு: கொடிவேரி தடுப்பணையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சத கிணறு தோண்டுவதை கண்டித்து கொடிவேரி ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

File pic
author img

By

Published : Jun 19, 2019, 7:50 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை மைசூர் மன்னரால் பவானி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் கோபிசெட்டிபாளையம் அந்தியூர் பவானி ஆகிய இடங்களில் உள்ள விவாசய நிலங்கள் பயன் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அணையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நீரேற்று நிலையம் அமைக்க பெரிய அளவிலான கிணறு தோண்டப்பட்டுவருகிறது.

கொடிவேரி அணையின் மேற்பகுதியிலும் அணையின் கீழ் பகுதியிலும் சாதகமான இடங்கள் எவ்வளவோ இருந்தும் அணையின் உட்பகுதியில் பெரிய அளவில் கிணறு தோண்டப்பட்டுவருகிறது.

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு

ரூ.224 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்போது கொடிவேரி அணையை ஆதாரமாக கொண்டுள்ள வேளாண் விளைநிலங்கள் போதுமான நீரின்றி பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் விவசாயிகள், பொதுமக்கள் அணையில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப் பணிகளை நிறுத்தக்கோரி மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் கேரிக்கை பரிசீலனை செய்து முடிவெடிக்கும் வரை பணிகள் தொடராது என அலுவலர்கள் உறுதி கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Intro:TN_ERD_01_19_SATHY_KODIVERY_DAM_ISSUE_VIS_TN10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையின் உள் புதிதாக அமைக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சஷ கிணறு குடிநீர் வடிகால் வாரியம் தோண்டப்படுவதை கண்டித்து விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மீனவர்கள் மற்றும் அக்கரைகொடிவேரி ஊர் பொதுமக்கள் அணையை முற்றுகையிட்டு போராட்டம்Body:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையின் உள் புதிதாக அமைக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சஷ கிணறு குடிநீர் வடிகால் வாரியம் தோண்டப்படுவதை கண்டித்து விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மீனவர்கள் மற்றும் அக்கரைகொடிவேரி ஊர் பொதுமக்கள் அணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை 900 ஆண்டுகளுக்கு முன்பு மைசூரை ஆண்டு மன்னரால் பவானி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணையின் மூலம் கோபிசெட்டிபாளையம் அந்தியூர் பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்கள் மூலம் 24504 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெற்றுவருகிறது. இந்நிலையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அணையின் உள் பகுதியில் தடப்பள்ளி வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் வழியிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நீரேற்று நிலையம் அமைக்க பெரிய அளவிலான கிணறு தோண்டப்பட்டுவருகிறது. கொடிவேரி அணையின் மேற்பகுதியிலும் அணையின் கீழ் பகுதியிலும் சாதகமான இடங்கள் எவ்வளவோ இருந்தும் அணையின் உட்பகுதியில் பெரிய அளவில் கிணறு தோண்டப்பட்டுவருகிறது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள் மற்றும் 547 வழியோர 547 ஊரக குடியிருப்புகளுக்கான கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் இதுவாகும் ஈரோடுமாவட்டம் பெருந்துறை சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் வாழும் மக்கள் விவசாயத்தை சார்ந்தும் போர்வெல் லாரி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் கோழிவளர்ப்பு கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இந்த புதிய குடிநீர் திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராம ஊராட்சிகள் பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் காஞ்சிகோயில் பெத்தாம்பாளையம் ஆகிய பேரூராட்சிகள் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 4 கிராம ஊராட்சிகள் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உட்பட குன்னத்தூர் ஊத்துக்குளி பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில்கொடிவேரி அணையின் நீர்த்தேக்கப்பகுதியின் மத்தியில் நீர்உந்து நிலையம் அமைக்கப்பட்டு ராட்சஷ மோட்டார் மூலம் திங்களூர் வரை கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படவுள்ளது. ரூ.224 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது கொடிவேரி அணையை ஆதாரமாக கொண்டுள்ள வேளாண் விளைநிலங்கள் போதுமான நீரின்றி பாதிக்க கூடும் என்ற அச்சத்தில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அணையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை நிறுத்தக்கோரி மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இ;த்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பழமைவாய்ந்த அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவும் தடப்பள்ளி பாசன விவசாயம் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் கொடிவேரி மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வது பாதிக்கப்படும் எனவும் அமைதியான அக்கரைகொடிவேரி கிராமம் மற்றும் பெரிய கொடிவேரி கிராமம் எதிர்காலத்தில் நாசமாகிவிடும் என்றும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் விவசாயக்கூலித்தொழிலாளர்கள் மீனவர்கள் மற்றும் இரு கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அராஜக போக்கைகண்டித்து 1000க்கும் மேற்பட்டவர்கள் அணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பொதுப்பணித்துறையினர் மற்றும் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இப்பணி நிறுத்தி வைக்கப்படும் என்றும் விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனை செய்து முடிவெடிக்கும் வரை பணிகள் தொராது என்றும் காவல்துறையினர் வருவாய்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கொடிவேரி அணை பகுதியில் சுமார் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டம் நடைபெறும் என்ற தகவலால் காலைமுதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியூரிலிருந்து அணைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திருப்பிச்சென்றனர். இப்போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்க கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்துறையின் சார்பில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.