ETV Bharat / state

வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கோரி மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்! - தொழிற்சாலை

ஈரோடு: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வருவாய்க்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தித் தர வலியுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கோரி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்!

author img

By

Published : Apr 24, 2020, 1:18 PM IST

ஈரோடு பவானி சாலைப் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் சாயத் தொழிற்சாலை, சலவைத் தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை ஆகியவற்றில் பணியாற்றி தினசரி கூலிகளைப் பெற்று வாழும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து வகை தொழிற்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் வருவாயின்றி அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தளர்வு விதியில் பல லட்சம் தொழிலாளர்கள் நம்பி வாழ்ந்து வரும் தொழிற்சாலைகளைத் திறந்து தங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவாய்க்கு வழி காட்டிட வேண்டும் என்றும், இல்லையென்றால் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறவரை தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தட்டுபாடுகளின்றி தாராளமாக வழங்கி உதவிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர்.

வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கோரி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்!

ஆனால், கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் அப்பகுதி மக்களை போராட்டத்திற்கு செல்லாமல் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி பெற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச்சென்று ஓரிரு நாளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படமால் போனால் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் பார்க்க: மீண்டும் சரிவின் பாதையில் இந்தியப் பங்குச்சந்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.