ETV Bharat / state

விவசாய நிலத்தில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு! - விவசாய நிலம் கையகம்

ஈரோடு: அறச்சலூர் அருகே விவசாய நிலத்தில் அமைய உள்ள மஞ்சள் ஆராய்ச்சி மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்
author img

By

Published : Jul 10, 2020, 8:22 PM IST

ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகேயுள்ள வடுகப்பட்டி எலவநத்தம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிலமில்லாதவர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப் பகுதியில் குடிசைகள் கட்டியும், கிணறுகள் வெட்டியும், தென்னை மரங்கள் பயிரிட்டும், பயிர்களை நட்டு விவசாயம் செய்தும் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தினர் ஒதுக்கிய அதே நிலப்பகுதியில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான அளவீடடுப் பணி இன்று ( ஜூலை 10) நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் வட்டாட்சியர், கூட்டுறவு பதிவாளர் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கடந்த 50 ஆண்டுகளாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதியில் குடிசைகள் அமைத்து அதற்கான மின்சார இணைப்பைப் பெற்று வாழ்ந்து வருகிறோம்.

மேலும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை, அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டைகளைப் பெற்றும், கிணறுகள் வெட்டி, தென்னைமரங்கள் உள்பட மரங்களை நட்டு தொடர்ந்து விவசாயத்தை மேற்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.

கடந்த 3 தலைமுறைகளாக கூட்டுறவு சங்கத்தினர் வழங்கிய நிலத்தை நம்பி வாழ்ந்து வரும் நிலையில், தற்போது வீடுகளை, விவசாய நிலங்களை காலி செய்யச் சொல்வது வருத்தத்துக்குரியது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது கடந்த பல ஆண்டுகளாக தங்களது வாழ்விடத்திற்கு பட்டாக்களைக் கேட்டு வலியுறுத்தி வந்தும் இதுவரை வழங்கவில்லை.

தற்போது எவ்வித ஆவணங்களுமில்லாத தங்களை காலி செய்து விரட்டி அனுப்புவது மாவட்ட நிர்வாகத்திற்கு மிகவும் எளிதான காரியம். தங்களது குடியிருப்புப் பகுதியையொட்டி 1, 000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள அரசுக்குச் சொந்தமான காலி இடத்தை கண்டு கொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலத்தை கையகப்படுத்துவது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர்.

கடந்த 50 ஆண்டுகளாக குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வரும் தங்களைக் காலி செய்யச் சொல்லி வற்புறுத்துவதில் அரசியல் காரணமும் உள்ளதாக குற்றம் சாட்டிய அப்பகுதியினர் இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசிய வட்டாட்சியர், கூட்டுறவுப் பதிவாளர் இதுகுறித்து மேலிடத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.