ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு: மலைக்கிராம மக்கள் துண்டுப்பிரசுரம் விநியோகம் - no vote

ஈரோடு : மல்லியம்மன் துர்கம் மலைக்கிராமத்தில் சாலை வசதி அமைக்கப்படாததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் சார்பில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

மல்லியம்மன் துர்கம்
author img

By

Published : Apr 15, 2019, 5:22 PM IST

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் இருக்கும் அந்த அடர்ந்த வனப்பகுதியில் மல்லியம்மன் துர்கம் கிராமம் ஒன்று உள்ளது. 200-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து நகரத்திற்குள் செல்ல ஏழு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய சூழல் உள்ளது.

மின்சாரம் மற்றும் சாலை வசதி இல்லாத இந்தக் கிராமத்திற்கு தற்போது சோலார் விளக்குகள் பொருத்தி மின்வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், மல்லியம்மன்துர்கம் கிராம மக்கள் கடம்பூர் -மல்லியம்மன் துர்கம் வரை சாலை அமைக்கக்கோரி பல மாதங்களாக வனத் துறையிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

வனத் துறை அனுமதி வழங்க மறுப்பதால் இக்கிராம மக்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அக்கிராம மக்கள், 2019 மக்களவைத் தேர்தலில் 'ஓட்டுப் போடமாட்டோம்' என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் சத்தியமங்கலம் மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் விநியோகம் செய்துவருகின்றனர். இதில், 'கடந்த 70 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மனு அளித்தும் அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டிவருகிறது. புலி, யானை ஆகிய வனவிலங்குகள் வசிக்கும் இந்த அடர்ந்த வனப்பகுதியில் எந்த பாதுகாப்புமின்றி வாழ்ந்து வருகிறோம்.

எட்டாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடம்பூர் சென்று மேல்படிப்பைத் தொடர சாலை வசதி இல்லாமல் தவித்துவருகின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லவேண்டிய அவல நிலை உள்ளதால் மல்லியம்மன் துர்க்கம் கிராமத்திற்கு சாலை வசதி செய்துதரும் வரை வாக்களிக்க மாட்டோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

15.04.2019

70 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை புறக்கணிப்பால் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு:

மலைகிராம மக்கள் சார்பில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டதால் பரபரப்பு

TN_ERD_SATHY_01_15_MALLIAM_DURGAM_VIS_TN10009

(VISUAL FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் அடுத்த மல்லியம்துர்க்கம் மலைக்கிராமத்தில் சாலை வசதி அமைக்கப்படாததால் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராமமக்கள் சார்பில் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மல்லியம்மன் துர்கம் கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் கடம்பூரிலிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக 7 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும். இங்கு வசிக்கும் மக்கள் மானாவாரியாக ராகி, அவரை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுவதோடு இங்கு விளையும் கொய்யா மற்றும் பலாப்பழங்களை தலையில் சுமந்தபடி கடம்பூர் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு கொண்டுவந்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மின்சாரம் மற்றும் சாலை வசதி இல்லாத இந்த கிராமத்திற்கு தற்போது சோலார் விளக்குகள் பொருத்தி மின்வசதி செய்யப்பட்டுள்ளது. கடம்பூரிலிருந்து மல்லியம்மன்துர்கம் வரை உள்ள அடர்நத வனப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்க மறுப்பதால் இக்கிராம மக்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் மல்லியம்மன் கிராம மக்கள் சார்பில் ஓட்டு போடமாட்டோம் என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் சத்தியமங்கலம் மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மனு அளித்தும் அரசு எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் அடர்ந்த வனப்பகுதியில் எந்த பாதுகாப்புமின்றி வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு வரை படித்தபின் மாணவர்கள் கடம்பூர் சென்று மேல்படிப்பை தொடர சாலை வசதி இல்லாததால் கல்வியை தொடர முடியவில்லை எனவும், உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லவேண்டிய அவல நிலை உள்ளதால் மல்லியம்மன் துர்க்கம் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தரும் வரை ஓட்டு போடமாட்டோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டி: ராஜசேகர், மல்லியம்துர்க்கம்    

TN_ERD_SATHY_01_15_MALLIAM_DURGAM_VIS_TN10009
(VISUAL FTP இல் உள்ளது)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.