சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின்போது (ஆடி 18) மட்டுமே நீர்த்தேக்கப் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இதனால் அணையைப் பார்க்க கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் அணைக்கு வருகை தருவார்கள்.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி சாகர் அணையில் ஆடிப்பெருக்கு அன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பவானி சாகர் அணை பூங்காவும் செயல்படாது எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு