தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்து வரும் ராகுல் காந்தி இன்று (ஜன.24) திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் பரப்புரை மேற்கொண்டார். தற்போது ஊத்துக்குளியில் அவர் பேசுகையில், “எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் தமிழ் மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். நானும் ஒரு தமிழன். தமிழில் பேசி தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார் பிரதமர் மோடி.
எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நிலவுவதற்கு மோடி அரசே காரணம். இளைஞர்கள், இளம்பெண்கள் வளமுடன் வாழ்வதற்கு நான் உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே நேரடியாக உங்களை சந்திக்கிறேன். தமிழ் பண்பாடு இந்தியாவில் சிறந்ததென்று அனைவருக்கும் தெரியும். இயற்கை வளம் உள்ள தமிழ்நாட்டில், மக்கள் நல்ல நிலையில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங்களால் மக்கள் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு விவசாயிகளைப் பற்றி கவலையில்லை. இந்தியாவில் ஐந்து பெரும் பணக்காரர்களை ஊக்குவித்து வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் நானும் தமிழன்தான்' - ராகுல் காந்தி!