ஈரோடு கனிராவுத்தர் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றாமல், அக்கட்டடங்கள் உள்ள பகுதியில் மாநகராட்சி சார்பில் கரைகளை பலப்படுத்தும் பணி நடக்கிறது.
இதனால், ஆக்கிரமிப்புதாரர்களுக்கு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆதரவாக செயல்படுவதாக கூறி, கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 23) மாலை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன் தலைமையில், குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் உள்பட பலர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது.
இறுதியாக, அக்டோபர் 1ஆம் தேதி குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் தணிக்கை செய்யப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன் கூறினார்.
மேலும் ஈரோடு முன்னாள் கோட்டாட்சியர் வழங்கிய உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதுவரை மாநகராட்சி சார்பில் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பிற பணிகளை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து மாநகராட்சி ஆணையருக்கு எதிரான மீட்பு இயக்கத்தினர் நடத்தவிருந்த போராட்டத்தையும் ஒத்திவைப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையரை கண்டித்து நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு! - மாநகராட்சி ஆணையருக்கு எதிராக போராட்டம்
ஈரோடு: கனிராவுத்தர் குளம் ஆக்கிரமிப்பு பிரச்னையில், மாநகராட்சி ஆணையர் இளங்கோவனை கண்டித்து நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
![மாநகராட்சி ஆணையரை கண்டித்து நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு! ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:02:23:1600911143-tn-erd-04-rdo-meeting-script-7205221-23092020201011-2309f-1600872011-300.jpg?imwidth=3840)