தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பல்வேறு காய் நகர்த்தல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே போஸ்டர் சண்டைகள் அதிகரித்துள்ளன. ஒருவரை ஒருவர் வசைபாடி ஒட்டப்பட்டும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு வருவதோடு கைகலப்பிலும் முடிந்து விடுகிறது.
ஈரோட்டில் திமுக, அதிமுகவினர் இடையே போஸ்டர் மோதல் வெடித்துள்ளது. கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் மக்களுக்காக உழைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தமிழக மக்களிடம் நடித்தவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்பதை குறிப்பதை போன்று உழைப்பா? நடிப்பா?, மக்கள் ஆட்சியா? குடும்ப ஆட்சியா? போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நள்ளிரவில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களை திமுகவினர் கிழித்து வருகின்றனர்.
நகரின் முக்கிய இடங்களில் இதுபோன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.