ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தபால் வாக்குப்பதிவில் முறைகேடா? - தேர்தல் அலுவலர் விளக்கம்! - இன்றைய ஈரோடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மூதாட்டி ஒருவரை கை சின்னத்துக்கு வற்புறுத்தி வாக்களிக்க வைத்ததாக அதிமுகவினர் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

Erode East By Election: தபால் வாக்குப்பதிவில் முறைகேடா? - தேர்தல் அலுவலர் விளக்கம்!

author img

By

Published : Feb 17, 2023, 1:11 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மூதாட்டி ஒருவரை கை சின்னத்துக்கு வற்புறுத்தி வாக்களிக்க வைத்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும், வயது மூத்தவர்கள், கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தபால் வாக்கு செலுத்துவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் அதற்கான படிவங்களை வீடு வீடாகச் சென்று 321 பேரிடம் வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று (பிப்.16) இந்த தபால் வாக்குக்கானது பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஈரோடு வலையக்கார வீதியில் வசித்து வரும் மாணிக்கம்மாள் என்ற மூதாட்டியிடம், திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் தபால் வாக்கை கை சின்னத்திற்கு பதிவு செய்ததாக புகார் எழுந்தது.

இந்தப் புகாரை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் ஆகியோர், தபால் வாக்குகளை சேகரித்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் அதிகாரிகளை தபால் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவகுமார், அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அதிகாரி சிவகுமார், 80 வயதிற்கு மேலானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து வருகிற 16, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த பணிகள் நடைபெறும் என்று கூறிய அவர், இன்று பதிவான வாக்குகள் ஸ்ட்ராங் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேநேரம் பாகம் 170இல் தபால் வாக்குகள் பதிவு செய்தது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நேரில் சென்று விசாரித்ததாக கூறிய சிவகுமார், புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிமுகவினரிடம் உறுதி அளித்ததாக கூறினார்.

பிரச்னை சுமூகமாக முடிக்கப்பட்டு, குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும் தெரிய வந்துள்ளதாக சிவகுமார் பதில் அளித்தார். மேலும் சுமூகமாக தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதை அதிமுகவினர் ஒப்புக் கொண்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர் என்றும், தேர்தல் விதிப்படி, அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் சிவகுமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீட்டு கேட்டு ரூ.1 கோடி பேரம்? - ஓபிஎஸ் ஆதரவாளர் புகார்; கே.பி.முனுசாமி புதிய விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.