ஈரோடு: பெருந்துறையில் காவல் துறையினர் இன்று (ஜூலை.11) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், மாவட்டத்தில் உள்ள பல்வேறு சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இரண்டு மாநில எல்லையான பண்ணாரி, திம்பம், காராப்பள்ளம் ஆகிய சோதனைச் சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன. சந்தேகத்துக்குரிய கேரளா பதிவு எண் கொண்ட கார், மீண்டும் பண்ணாரி சோதனைச்சாவடியை கடந்தபோது காவல் துறையினர் நிற்பதைக் கண்டு கோவைக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல் துறையினரின் சோதனைக்கு நிற்காமல் சென்ற கார் மாவோயிஸ்ட் கும்பலா, கொள்ளை கும்பலா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதனால், தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளின் பெயர், முகவரி, வாகனப் பதிவு எண் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கொங்கு நாட்டுக்கு குறி: திமுகவில் ஐக்கியமாகும் தோப்பு வெங்கடாசலம்