கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவு மையத்தை ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலர் கதிரவன் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், தேர்தல் பணியாற்றும் காவல் துறையினர் ஒவ்வொரு பகுதியிலும் அஞ்சல் வாக்களித்துவருகின்றனர்.
அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில், தேர்தல் பணியாற்றும் காவல் துறையினர் 1,424 பேர் அஞ்சல் வாக்களித்துவருகின்றனர்.
அஞ்சல் வாக்கு
- ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 526 நபர்களும்,
- பவானியில் 284 நபர்களும்,
- கோபிசெட்டிபாளைத்தில் 381 நபர்களும்,
- பெருந்துறையில் 233 நபர்களும் அஞ்சல் வாக்கிற்கு விண்ணப்பித்துள்ளனர்.
அஞ்சல் வாக்கு விண்ணப்பித்த காவலர்கள், அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆர்வமுடன் அஞ்சல் வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் காவல் துறையினருக்கு கோபிசெட்டிபாளையம் தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தை ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலர் கதிரவன் நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
இதையும் படிங்க: 'மே 2 ஆம் தேதி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் - சத்யபிரத சாகு'