ETV Bharat / state

ஆய்வாளருக்கு கரோனா பாதிப்பு: காவல்நிலையத்திற்கு வெளியே புகார் கொடுக்க ஏற்பாடு! - காவல் நிலையத்திற்கு வெளியே புகார்

ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, காவல் நிலையத்திற்கு வெளியே புகார் மனு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

police inspector tested positive
காவல் நிலையத்திற்கு வெளியே புகார் மனு
author img

By

Published : May 26, 2021, 1:58 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையம். இங்கு காவல் ஆய்வாளராக வேலுச்சாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஊடரங்கு விதியை மீறுபவர்களைக் கண்காணிக்க இவர் தலைமையில், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் புஞ்சை புளியம்பட்டி ஆய்வாளருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதால், அவர், கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதன் காரணமாக புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு வெளியே புகார் மனு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.