அந்தியூர் தேர் வீதியில் கடந்த 5ஆம் தேதி பிரபல துணிக்கடையில் பணிபுரிந்த கடை பணியாளரின் செல்போனை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றதாக கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அங்கியிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்தினர். இதையடுத்து, இன்று (ஏப்.9) சம்பந்தப்பட்ட நபரை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
செல்போன் திருடிய நபர் ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’கருத்து மோதல்களை தேர்தலோடு மறந்து சகோதர உறவுகளாக வேண்டும்’ - ஸ்டாலின்