ஈரோடு: தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பகத்ரகள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவடங்களிலிருந்தும் கர்நாடகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் புனித தலமாக கருதபடும் இக்கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. . மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் இரவு 9 மணிக்கு சிறப்புபூஜைக்கு பின் கோவில் நடை சாத்தப்படுகிறது.
வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் இரவு 9 மணிக்கு பின் கோவில் வளாகத்தில் தங்க அனுமதிப்பதில்லை. இதனால் பக்தர்கள் அதிகாலை பூஜையில் கலந்து வேண்டுமெனில் சத்தியமங்கலம், கோபி மற்றும் ஈரோட்டில் தங்க வேண்டியுள்ளது. எனவே பாதுகாப்புள்ள கோவில் மண்டபகங்களில் பக்தர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இக்கோவிலில் வெளியூர் பக்தர்கள் தங்க அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அண்மையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் பண்ணாரி வனப்பகுதியில் உள்ள பண்ணாரிஅம்மன் கோவில் அமைந்துள்ள பக்தர்கள் பாதுகாப்பு கருதி இரவில் தங்க அனுமதிப்பதில்லை என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Video:பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி வசூல்