ETV Bharat / state

அரசு பேருந்தில் "அடடா மழை டா.. அட மழைடா" - erode

சத்தியமங்கலத்தில் பெய்த தொடர் மழையால் அரசு பேருந்தில் ஆங்காங்கே மழை நீர், சொட்டு சொட்டாக விழுந்ததால் இருக்கையில் அமர முடியாமல் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

அரசு பேருந்தில் கொட்டும் மழைநீர்
அரசு பேருந்தில் கொட்டும் மழைநீர்
author img

By

Published : Nov 12, 2022, 2:08 PM IST

ஈரோடு: வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு சத்தியமங்கலம் பகுதியிலும் நேற்று காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் அரசு பேருந்தில், மழையின் காரணமாக பேருந்தின் கூரையிலிருந்து சொட்டு சொட்டாக மழைநீர் பேருந்துக்குள் கொட்டியது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ...

இதனால் பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் நின்றபடியே பயணித்தனர். பேருந்து முழுவதும் மழையின் காரணமாக ஒழுகியதால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

இதனை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தென்காசியில் கோவிலில் புகுந்த மழை நீரை அகற்றும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.