கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், நகர் பகுதி முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் ஒலிபெருக்கில் கரோனா நோய் தொற்று மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் மக்கள் விட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் ஆகிய காவல் நிலையங்களுக்கு சென்று அங்கு காவலர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் சுத்தத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா, காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு : சலிப்பை சமாளிக்க புகையிலை, மதுவை பயன்படுத்த வேண்டாம் - சுகாதார அமைச்சகம்