ETV Bharat / state

தீபாவளி இரவில் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து மகிழும் மக்கள் - diwali

ஈரோடு மாவட்டத்தில் இரவில் மக்கள் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி இரவில் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்த மக்கள்

author img

By

Published : Oct 24, 2022, 9:45 PM IST

ஈரோடு: தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு மக்கள் காலை நேரத்தில் புத்தாடை உடுத்தி உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டனர். தற்போது இரவு நேரத்தில் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தும், வாணவெடிகளை விட்டும் தீபாவளியை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நண்பகல் முதலே பட்டாசு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிக ஆர்வத்துடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் குழுவாக சேர்ந்த ராக்கெட் வடிவிலான வாணவெடியினை வானத்தில் விட்டு கொண்டாடினர்.

புதுமணத்தம்பதியர் கணவருடன் பட்டாசு வெடித்து தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சத்தியமங்கலம் பகுதியில் எங்கு பார்த்தாலும் பட்டாசு சத்தம் கேட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

தீபாவளி இரவில் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து மகிழும் மக்கள்

இதையும் படிங்க: தீபாவளி: பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒளிரப்போவது எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.