ETV Bharat / state

Erode -வட்டி இல்லாத கடன் வழங்குவதாக பெண்களிடம் மோசடி; கடன் நிறுவனம் முற்றுகை - loan company that cheated by interest free loans

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வட்டி இல்லாத கடன் வழங்குவதாகக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூபாய் 30 லட்சம் வரை மோசடி செய்த கடன் நிறுவனத்தை 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 27, 2023, 10:26 PM IST

கடன் நிறுவனத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள்

ஈரோடு: வில்லரசம்பட்டி ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் 'ஜென்சேவா கேந்திரா' என்ற பெயரில் தனிநபர் கடன், வீட்டுக் கடன், மகளிர் குழு கடன், இடத்தின் பெயரில் கடன், தொழில் கடன் மற்றும் மருத்துவ காப்பீடு, இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு, தொழில் காப்பீடு ஆகியவற்றை தமிழ்ச்செல்வன் என்பவர் வழங்குவதாகக் கூறி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் மகளிர் குழு கடன் வழங்குவதாகக் கூறி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி, நசியனூர், பவானி, பெருந்துறை உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் உள்ள மகளிர் குழுத் தலைவியின் மூலமாக உறுப்பினர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

மேலும் இந்த, வட்டி இல்லாத கடன் வழங்குவதற்கு 50,000 ரூபாய் கடனுக்கு 500 ரூபாயும் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு ஆயிரம் ரூபாயும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும் எனவும்; இரண்டு புகைப்படங்கள், ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டப் பல்வேறு ஆவணங்களை வழங்க வேண்டும் எனவும் மகளிர் குழு பெண்களிடம் கூறியுள்ளனர்.

இதனை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் குழு பெண்கள் பணத்தை செலுத்தி தங்களது வங்கி கணக்கு மற்றும் ஆவணங்களையும் வழங்கி உள்ளனர். ஆனால், பணம் செலுத்தியும் இதுவரை கடன் தொகையை பெற்றுத் தராத நிலையில், மகளிர் குழு பெண்களில் சிலர் இந்த நிறுவனத்திடம் முறையிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே நேற்று (ஜூலை 27) முதல் மகளிர் குழு பெண்களிடம் பதிலளித்ததாகவும், நிறுவனத்தை நடத்தி வரும் தமிழ்ச்செல்வன் என்பவர், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி உள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிகழ்வு தெரிய வந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஈரோடு வில்லரசம்பட்டியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு, தாங்கள் அளித்த ஆவணங்களை எடுத்ததுடன் நிறுவனத்தின் ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நான்கு பேரை வீரப்பன்சத்திரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தலைமுறைவாக உள்ள நிறுவனத்தை நடத்தி வந்த தமிழ்ச்செல்வன் என்பவனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். வட்டி இல்லாத கடன் வழங்குவதாகக் கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் 30 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு; குழந்தையைக் கடத்திய தம்பதி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.