தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழ்நாடு அரசானது ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தமிழ்நாடு-கர்நாடகா இடையே காய்கறி, பழம், பெட்ரோல், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கர்நாடகாவில் இருந்து வந்த லாரிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் தேங்காய் மட்டை பாரம் இருந்தது தெரியவந்தது. அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிய லாரிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், பொதுமுடக்க விதியை மீறியதாக 5 சரக்கு லாரிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க: முன்பதிவு மையங்கள் குறைப்பு - தெற்கு ரயில்வே!