ETV Bharat / state

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு 3100 கன அடியிலிருந்து 900 கனஅடி ஆக குறைந்தது.

author img

By

Published : Jan 25, 2022, 2:55 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரட்டைப்படை மதகு பாசனப் பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களுக்கு நெல் பயிரிடுவதற்காகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாசனத்திற்குத் நீர் திறக்கப்பட்டது.

நீர் திறப்பு தேதி கெடு முடிந்தது

விநாடிக்கு 2300 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் மூலம் பாசனப் பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இந்நிலையில் தற்போது நீர் திறப்பு தேதி கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று (ஜன.25) காலை பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 3,100 கன அடியிலிருந்து 900 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.81 அடியாகவும், நீர் இருப்பு 27.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1521 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காகப் பவானி ஆற்றில் 900 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முழு ஊரடங்கு - அடுத்தடுத்த ஐந்து கடைகளில் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.