ETV Bharat / state

வெளிமாவட்டங்களிலிருந்து தேர்வெழுத வரும் மாணவர்களுடன் பெற்றோர்கள் தங்க வசதி! - minister sengottaiyan about 10th public exam

ஈரோடு: வெளிமாவட்டங்களிலிருந்து தேர்வெழுத வரும் மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் தேர்வு மையத்தில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

minister sengottaiyan
minister sengottaiyan
author img

By

Published : May 22, 2020, 4:17 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொங்கு மண்டபத்தில் நடந்த நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் பவானிசாகர் எம்எல்ஏ எஸ். ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ”10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியாக பொதிகை கல்வி தொலைக்காட்சி, யூடியூப் சேனல் ஆகியவற்றின் வழியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் மாணவர்கள் தேர்வெழுத வசதியாக இ-பாஸ் முறை உள்ளது. மேலும் மாணவர் தங்களது அடையாள அட்டையைக் காட்டினாலே போதும். அதைக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் செல்லலாம்.

மூன்று நாள்கள் முன்பாகவே மாணவர்களுடன் பெற்றோர்கள் தேர்வு மையத்தில் தங்கவும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் தங்கும் விடுதிகளில் அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3,200 தேர்வு மையங்கள் 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வகுப்பறைக்கு 10 பேர் வீதம் இடைவெளி விட்டு தேர்வு எழுதலாம்” என்றார்.

இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.