ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி மாரியம்மன் கோயிலில், சித்திரை மாதத்தில் கம்பம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் கோயிலில் தொடங்கப்பட்டது. அதில் இன்று கோயில் வளாகத்தில் பறை இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த என்.எஸ்.கே. குழுவின் பறை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் முன்னதாக பறை அடித்தபடி நடனமாடியதோடு, தீப்பந்தங்கள் ஏந்தியபடியும் பல்வேறு சாகச கலைகளை பறை இசைக்கு ஏற்றவாறு செய்து காட்டினர்கள். இதனைக் கண்ட பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.