ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் மொத்தம் 10 வார்டுகள் உள்ளன. அதில் நெரிச்சிப்பேட்டை, காமதேனுநகர், குமரன் நகர் வார்டுகளுக்குப் போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி பெண்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த மூன்று வார்டுகளிலும் சாக்கடை வசதி, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதும் செய்து தரப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் அந்த வார்டுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் வழங்கக்கோரி கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் மாற்றுக்கட்சி வார்டுகளில் குடிநீர் வழங்காமல் காழ்புணர்ச்சியில் செயல்படுவதாகத் தெரிவித்தனர்.
அதையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் குடிநீர்.. தாகம் தீர்க்குமா தமிழ்நாடு அரசு!