ETV Bharat / state

புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்! - service road issue

ஈரோடு: புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை அருகேயுள்ள பவளத்தாம்பாளையம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Pagalathampalayam service road issue
புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
author img

By

Published : Sep 25, 2020, 8:52 PM IST

நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டைப் பகுதியிலிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை அருகேயுள்ள பவளத்தாம்பாளையம் வரை புறவழிச்சாலை அமைக்க திட்டம் போடப்பட்டது. இதில், பவளத்தாம்பாளையத்தில் அமையவுள்ள சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த முறையான இழப்பீடு வழங்கவில்லை என அப்பகுதி விவசாயிகள், கடந்த பத்தாண்டுகளாக நிலத்தை வழங்க மறுத்துவருகின்றனர்.

இந்நிலையில், இன்று பவளத்தாம்பாளையம் பகுதிக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர், புறவழிச்சாலை திட்டத்தின் முடிவுப் பகுதியாகவுள்ள நிலத்தை உரிமையாளர்கள் அனுமதியின்றி சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த நிலத்தின் உரிமையாளர்கள், விவசாயிகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நெடுஞ்சாலைத் துறையினரின் செயலைக்கண்டித்துப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பவளத்தாம்பாளையம் விவசாயிகள் பேட்டி

கடந்த பத்தாண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலத்தை அங்கீகரிக்கப்படாத நிலமாக அலுவலர்கள் மாற்றியுள்ளதாகவும், விவசாய நிலத்தை விவசாய நிலமில்லையென பதிவு செய்துள்ளதாகவும் நிலத்தின் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இதில், அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறிய அவர்கள், தங்களுக்கு முறையான இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: ஈரோடு கடைவீதிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.