ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை இந்த தொகுதி, அதிமுக கூட்டணியில் த.மா.கா. கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த முறை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு அந்த தொகுதியை த.மா.கா. விட்டுக்கொடுத்துள்ளது. இந்நிலையில், நாளை (ஜன.21) ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து செய்தியாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது அதிமுக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'அநாகரிகத்தின் அடையாளம் ஹெச்.ராஜா' - திருமாவளவன்