தமிழ்நாட்டில் கரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம், தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அமைந்திருப்பதால் இரு மாநிலங்களில் பயணிக்கும் காய்கறிகள், அத்தியாவசிய பொருள்கள் கொண்டுசெல்லும் லாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அரசு தடை உத்தரவை மீறிவரும் வாகனங்கள் எச்சரித்து அனுப்பப்பட்டன.
ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, கோட்டு வீரம்பாளையம், புதிய பாலம், எஸ்ஆர்டி கார்னர் ஆகிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டில் 3 லட்சத்தை நெருங்கும் தினசரி கரோனா பாதிப்பு!