ETV Bharat / state

அனுமதியின்றி செயல்பட்ட மாட்டிறைச்சி கடை - பொக்லைன் மூலம் இடித்த அதிகாரிகள் - ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி

ஈரோடு அருகே அனுமதியின்றி திறந்த வெளியில் செயல்பட்ட மாட்டிறைச்சி கடைகளை நகராட்சி அலுவலர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர்.

Etv Bharatஅனுமதியின்றி செயல்பட்ட மாட்டிறைச்சி கடை - பொக்லைன் மூலம் இடித்த அதிகாரிகள்

author img

By

Published : Nov 22, 2022, 1:02 PM IST

Updated : Nov 22, 2022, 1:58 PM IST

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் 15க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் அனுமதி இல்லாமல் மாட்டு இறைச்சி கடைகள் செயல்படுவதாகவும், திறந்த வெளியில் மாடுகளை அடித்து துன்புறுத்தி அங்கேயே அறுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாட்டிறைச்சி கடைகள் செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.

மேலும் மாட்டு இறைச்சி கழிவுகளை வாரசந்தை வளாகத்தில் வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி மாட்டு இறைச்சிக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று(நவ-21) மாட்டிறைச்சி கடைகளை உரிமையாளர்களே தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இல்லை எனில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனாலும் மாட்டு இறைச்சி கடைகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து இன்று அதிகாலை பொக்லைன் இயந்திரத்துடன் சென்ற நகராட்சி அலுவலர்கள் 15 கும் மேற்பட்ட மாட்டிறைச்சி கடைகளின் கட்டடம் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

அனுமதியின்றி செயல்பட்ட மாட்டிறைச்சி கடை - பொக்லைன் மூலம் இடித்த அதிகாரிகள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாடுகளை வெட்ட வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் நேற்று (நவ-21)வந்து கூறினர். ஆனால் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அதிகாலையில் வந்து மாட்டு இறைச்சி கடைகளை அப்புறப்படுத்திய நகராட்சி நிர்வாகம் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதாக மாட்டு இறைச்சி வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு... விசாரணை ஒத்திவைப்பு

Last Updated : Nov 22, 2022, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.