ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அலுவலர்கள் தூங்கி வழிந்து காணப்பட்டனர்.
விவசாயிகளின் பிரச்னைகளை செவிமடுத்து கேட்க வேண்டிய அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் இருக்கும் போதே தூங்கி வழிந்தது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இடையும் படிங்க: உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இடமாறுதலை ரத்துசெய்ய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை