ETV Bharat / state

உயரும் புலிகள் எண்ணிக்கை - சத்தியமங்கலம் காப்புக்காட்டிலிருந்து மகிழ்ச்சித் தகவல் - புலிகள் தினம்

சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

number-of-tigers-increase-in-sathyamangalam-tiger-reserve
புலிகள்
author img

By

Published : Jul 29, 2023, 5:09 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 83 ஆக உயர்வு

ஈரோடு : அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம்,தாய்லாந்து ,சீனா ரஷ்ய உள்ளிட்ட 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. கடந்த 2022 கணக்கின் படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3167 ஆக உள்ளது இது உலக புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிதம் ஆகும். அதிலும் புலிகளின் புகலிடமாக விழங்குவது சத்திய மங்கலம் புலிகள் காப்பகம்.

இந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1409 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. முன்பு யானைகள் சரணாலயமாக இருந்த இந்த வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.ஆரம்பத்தில் புலிகளின் எண்ணிக்கை 10 -க்கும் அதிகமாக இருந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. WPF எனப்படும் உலக வனஉயிரின நிதியத்தின் அறிவுரைப்படி புலிகள் காப்பகம் கோர் மற்றும் பஃபர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2013ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை 22 ஆக இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 83 புலிகள் உள்ளன . அதனைத் தொடர்ந்து புலிகளை பாதுகாக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு, கணினி மயமாக்கப்பட்ட ரோந்து பணிகள் , புலிகள் வேட்டையாடுதல் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கையாக புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் தலமலை, பெஜலட்டி, தெங்குமரஹாடா, கேர்மாளம் ஆகிய வனப்பகுதியில் மனித இடையூறு இல்லாத நீர் நிலைகள் கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் புலிகள் வசிக்கின்றன. அதிக பரப்பளவுகொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 150 புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளதாகவும் தற்போது 83 புலிகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.15 ஆண்டுக்கு முன் 10 புலிகள் மட்டுமே இருந்த நிலையில் வனத்துறையினரின் பல்வேறு நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை இந்த காப்பகத்தில் பல்கி பெருகி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டி பந்திப்பூர், முதுமலை,வயநாடு மற்றும் நாகர்ஹலே போன்ற புலிகள் காப்பகங்கள் உள்ளதால் புலிகள் எளிதாக இடம்பெயர்ந்து இனப்பெருக்கத்தை ஏற்படுத்துவதால் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அண்மையில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. புலிகளால் கிராமமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத நிலையை பேணவும், புலிகளை காக்கவும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க : எல்லை கடந்த காதல்.. ஆந்திர இளைஞரை கரம் பிடித்த இலங்கை பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.