ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் செயல்பட்டுவரும் தனியார் நூற்பாலையில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 203 நபர்கள் வெளிமாநில தொழிலாளர்களாவர். இவர்களில் அசாம், ஒடிசாவிலிருந்து வந்திருந்த இருவருக்கு காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தால் கூகலூரில் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காக நேற்று அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கரோனா அறிகுறி சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து இந்த இரு வடமாநில தொழிலாளர்களைப் பெருந்துறையில் செயல்படும் ஐ.ஆர்.டி.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் அவர்களுடன் பணியாற்றி மற்ற தொழிலாளர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளதா என்பதை அறிய கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் தாசில்தார் சிவசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் அனைவரையும் பரிசோதனை செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை: களத்தில் இறங்கிய பஞ்சாயத்து தலைவர்கள்