உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப்போட்டியில் குஜராத் அணியுடன் தோல்வியடைந்த தமிழ்நாடு அணி இரண்டாம் இடம்பிடித்தது.
மேலாளர் ஹரி தலைமையில் சென்ற இந்த அணிக்கு தமிழ்நாடு அணியின் சேர்மன் ரமேஷ் கண்ணன், இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளைச் செய்துவந்தனர். போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு அணி வீரர்கள் இன்று ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தனர்.
ஆனால், அவர்களை வரவேற்க அரசுத் தரப்பில் யாரும் வரவில்லை. இதனால் வீரர்கள் மிகவும் மனவேதனை அடைந்தனர். தமிழ்நாடு அணிக்காக விளையாடி கோப்பை பெற்றுவந்த மாற்றுத்திறனாளி வீரர்களை வரவேற்கக் கூட தமிழ்நாடு அரசுக்கு மனதில்லையா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய மக்கள் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறிச்சென்றனர்.
இதையும் படிங்க: 'கை' போனால் என்ன? நம்பிக்'கை' இருக்கு ஜெயிக்க!