சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார். அதில் 2300 மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்பொழுது அவர் கூறுகையில்,
'இந்தியாவில் 80 பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தில் மட்டுமே 1.82 லட்சம் பொறியியில் பட்டதாரிகள் வேலை தேடி வருகின்றனர். ஆனால் கலைக்கல்லூரியில் படித்தவர்கள் ஏதாவது ஒருவேலையை தேடிக்கொள்கின்றனர்.
இந்தியாவில் உயர்கல்வி சதவீதம் 26 ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே 48.91 சதவீதம் உயர்கல்வி பயிலுகின்றனர். ஏழை எளிய மக்களும் படிக்க வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சத்துணவு திட்டத்தை சிறப்பாக நடத்தினர்.
அடுத்த ஆண்டு ஒரு லட்சம் எல்கேஜி வகுப்புறைகள் கட்டப்படும். அடித்தட்டு மக்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் வகையில் 6 முதல் 8 வகுப்பு வரை கல்வித்துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது' என்றார்.