ETV Bharat / state

New Year 2023: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - Crowd of devotees at Bannari Amman temple

2023 புத்தாண்டையொட்டி, சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 1, 2023, 9:36 PM IST

New Year 2023: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் (Bannari amman Temple, Erode) அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் 2023ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி, இன்று (ஜன.1) பண்ணாரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் முன்பு உள்ள குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விரதம் இருந்து மதியம் உச்சி பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் கோயில் முன்பு நெய்தீபம் ஏற்றி பண்ணாரி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பண்ணாரி அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆங்கிலப் புத்தாண்டு தினம் மற்றும் விடுமுறை நாட்கள் என்பதால் இன்று நாள் முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாகவே இருக்கும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்: ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.