ETV Bharat / state

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே டெம்போ சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் நான்கு பெண்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

near gobichettipalayam 12 injured in a tempo accident
சரக்கு வாகனம்
author img

By

Published : Dec 14, 2019, 8:07 PM IST

ஈரோடு மாவட்டம் பாரியூர் பகுதியில் கோபிசெட்டிபாளையத்திலிருந்து அந்தியூரை நோக்கி சென்ற டெம்போ சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் பயணம் செய்த நான்கு பெண்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் தகவல் தெரிவித்ததில் சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்களுக்கு அனுப்பிவைத்தனர். பின் விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்பட்டது.

தொடர்ந்து விபத்துக் குறித்து மேற்கொண்ட விசாரணையில், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உயிரிழந்த உறவினரின் இறுதிச்சடங்கிற்கு தவிட்டுப்பாளையத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் மின் மயானத்திற்கு அந்த 12 நபர்கள் டெம்போ சரக்கு வாகனத்தில் வந்துள்ளனர். இறுதிச்சடங்கு முடிந்து திரும்பி அந்தியூர் செல்லும் வழியில் வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் விபத்து ஏற்பட்ட பின் ஓட்டுநர் தப்பியோடியதாகவும் தெரியவந்தது.

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம்

இதையும் படியுங்க: பள்ளி வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து: 8 மாணவர்கள் படுகாயம்

Intro:Body:tn_erd_07_sathy_van_accident_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் பகுதியில் டெம்போ சரக்கு வாகனம் சாலையின் மத்தியில் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த நான்கு பெண்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கான மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் பகுதியில் கோபிசெட்டிபாளையத்திலிருந்து அந்தியூரை நோக்கிச்சென்ற டெம்போ சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இவ்வானத்தில் பயணம் செய்த நான்கு பெண்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்களுக்கு அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை சீர் செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதில் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் ஏற்பட்ட உறவினர் உயிரிழப்புக்கு இறுதிச்சடங்கு செய்ய அந்தியூர் தவிட்டுப்பாளைத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் மின் மயானத்திற்கு 12 நபர்கள் டெம்போ சரக்கு வாகனத்தில் வந்துள்ளதாகவும் இறுதிச்சடங்கு முடிந்து திரும்பி அந்தியூர் செல்லும் வழியில் பாரியூர் பகுதியில் டெம்போ சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் ஓட்டுநர் தப்பியோடியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளர். மேலும் காயம் பட்டவர்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டுவருவதாகவும் கூறினர். டெம்போ சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துள்ளானதால் அந்தியூர் - கோபிசெட்டிபாளையம் பிரதான சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது….
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.