ஈரோடு மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மாவட்டம் முழுவதும் தன்னார்வ அமைப்பினர்களை இணைத்துக்கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக வீடுகள், பள்ளிகள், வியாபார நிறுவனங்கள் முன்பாக மரங்களை நட்டு வருகின்றனர்.
மரங்களை நடுவதற்கு முன் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள், பள்ளிகள், வியாபார நிறுவனத்தினரிடம் ஒப்புதல் பெற்றதற்குப் பிறகே மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் ஈஸ்வரன் கோயில் வீதிப் பகுதி அருகே அரசுப் பள்ளி, வீடுகள் முன்பாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டு நன்கு வளர்ந்திருந்த மரங்களை கடந்த சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் விசாரணை மேற்கொண்டிருந்தபோது, ஈஸ்வரன் கோயில் செயல் அலுவலர் சேஷையன் என்பவர், இயற்கை ஆரவலர்கள் மரங்களை விளம்பரங்களுக்காக நட்டு வருவதாகவும், மரங்களை யாரின் அனுமதி பெற்று வைக்கப்படுகிறது? என்று கேள்வியெழுப்பி மரங்களை வைத்து இடையூறு ஏற்படுத்துவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் நன்கு வளர்ந்திருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்களை விமர்சனம் செய்த அரசு ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மரங்களை வெட்டியவர்கள் மீது உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்திட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரச மரத்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கோவைவாசிகள்!
மரத்தை வெட்டியவர் மரங்களை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு! - erode collector Kathiravan
ஈரோடு: ஈஸ்வரன் கோயில் அருகே வளர்க்கப்பட்டு வந்த மரங்களை வெட்டியவர்களுக்கு 5 ஆயிரம் மரங்களை நடவைத்து பராமரித்திடக்கோரி இயற்கை ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கினர்.