ETV Bharat / state

விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை - சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் - Motorists Selfy Passion

வனவிலங்குகளின் வாழ்விடத்தில் அத்துமீறி நுழைந்து விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

வாகன ஓட்டிகள் செல்பி மோகத்தால் நிம்மதியிழக்கும் வனவிலங்குகள்

author img

By

Published : Jun 14, 2022, 9:18 PM IST

சத்தியமங்கலம் 1435 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டின் 4ஆவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், புள்ளிமான்கள், கழுதைப் புலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாகவும் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் 'தலமலை' வனப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாகவும் இருந்து வருகிறது.

அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால சூழ்நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர், கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர்.

வாகன ஓட்டிகள் செல்பி மோகத்தால் நிம்மதியிழக்கும் வனவிலங்குகள்
வாகன ஓட்டிகளின் செல்ஃபி மோகத்தால் நிம்மதியிழக்கும் வனவிலங்குகள்

யானைகள், புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாலையோரம் படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட வருவது வழக்கம். அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால், இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள்; யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி நடமாடும் யானைகளை எரிச்சலூட்டும் வகையில் புகைப்படம் எடுப்பதும், சப்தமிடுவதுமாக வனவிலங்குகளுக்கு இடையூறு செய்கின்றனர்.

சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்ஃபி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பி ஓடுவதும் வாடிக்கையாகி விட்டது. ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். சிலர் நீரோடைகளின் அருகே உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதையும் காணமுடிகிறது.

இவ்வாறு விலங்குகளின் வாழ்விடத்தில் அத்துமீறி நுழைந்து விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித - விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்; ஆபத்து நிகழும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது சட்டப்படியான அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க : இரண்டு குட்டிகளை சுமந்தபடி சாலையை கடக்கும் கரடி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.