ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் - சங்கீதா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், பிறந்து மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையும் உள்ளனர்.
தம்பதியினர் இரண்டாவதாக ஆண் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் விரக்தியடைந்த சங்கீதா பெண் குழந்தையைத் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, பின் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து பெருந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது!