ETV Bharat / state

காவிரியில் வெள்ளப்பெருக்கு.. ஈரோடு, கொடுமுடியில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொடுமுடியில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்

author img

By

Published : Aug 31, 2022, 8:03 PM IST

ஈரோடு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று மதியம் நிலவரப்படி மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடி நீர் வந்தது. அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் மதியம் பின்பு மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனையடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணை மின் நிலையம் சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும் ஒவ்வொரு நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 22 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி, ஈரோடு, கொடுமுடி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பவானியில் 211 குடும்பங்களைச் சேர்ந்த 662 நபர்களும், கொடுமுடியில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 344 நபர்களும், ஈரோட்டில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 50 நபர்களும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்

இந்நிலையில் குசால் கேஆர் பர்வா தலைமையிலான 20- பேர் கொண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புக்கு தேவையான சாதனங்களுடன் பவானிக்கு விரைந்து வந்துள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளூர் மக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிஎன் முருகேஸ்வரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பவானியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிகளையும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிஎன் முருகேஸ்வரன், ஈரோடு, நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றுப் புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்கள் மற்றும் ஆற்றின் கரையோரத்தில் பட்டா நிலத்தில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு ஆற்றின் கரையில் இருந்து 100 மீட்டர் பின்பு வசிப்பதற்கு அல்லது மாற்று இடம் வழங்குவதற்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் அரசிடம் அறிக்கை சமர்பித்த பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்த வேண்டும்... மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.