ஈரோடு மாவட்டம், சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். கோவை சாலையில் உள்ள மடத்துப்பாளையத்தில் வசித்து வரும் இவர் தனது மனைவி, மகனின் குடும்பத்தினரை பார்த்துவிட்டு வீட்டின் அருகேயுள்ள கடையின் முன் அமர்ந்திருந்தார்.
பணம் பறிப்பு
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுப்பிரமணியை தாக்கி, அவரிடமிருந்த 22 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.
சிசிடிவி காட்சி
முதியவரைப் பட்டபகலில் தாக்கி பணம் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் கத்தி முனையில் பணப்பறித்தவர்கள் கைது!